Monday, June 8, 2026 2:02 pm
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 129 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதியில் 10 கி.மீ கடல் ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. தைவான், ஜப்பான், குவாம், பப்புவா நியூ கினியா மற்றும் மேற்குப் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது.
நிலநடுக்கத்தில் பல கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

