Friday, June 5, 2026 12:22 pm
ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தின் முன்சக்கரம் திடீரென உடைந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஜேர்மனியின் பிராங்க்போர்ட் சர்வதேச விமான நிலையத்தில் லுப்தான்சா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தின் முன்சக்கரமே இவ்வாறு திடீரென உடைந்து விழுந்துள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த விமானம், விமான நிலைய நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் விமானப் பணியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்த சம்பவத்தில் பல பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். பயணிகள் விமானத்தில் ஏறாத நிலையில் இருந்ததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் லுப்தான்சா நிறுவனத்தின் புதிய போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானங்களில் ஒன்றாகும். விபத்துக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் ஜேர்மன் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் லுஃப்தான்சா நிறுவனம் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

