Thursday, June 4, 2026 12:59 pm
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நாவலப்பிட்டிய, மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீதே பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பாடசாலை மாணவன் அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்திலிருந்து முச்சக்கரவண்டியின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். நாவலப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து மரத்திற்குள் சிக்குண்டிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டு நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

