Thursday, June 4, 2026 11:57 am
களுத்துறை மாவட்டம் ஹொரணை பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த 7 பேர் ஹொணை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மூவர் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனமாக நடத்தப்பட்டு வந்த இந்த பாதுகாப்பு மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது சுமார் 72 பேர் இருந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் கருகிய 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 51 பேர் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று நடத்தப்பட்ட பின்னர் சடலங்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

