Friday, May 15, 2026 10:17 am
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்வி பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆ.சுமதி தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக , மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே , இன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

