Thursday, May 7, 2026 11:22 am
ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் ,கப்பல்கள் மீதான தாக்குதல்கள் “நியாயமற்றவை” என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியனிடம் தெரிவித்ததாக னுடன் பேசியதாகவும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
“தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் குறித்து எனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் பல கப்பல்கள் மீதான நியாயமற்ற தாக்குதல்களையும் நான் கண்டித்தேன்,” என்று எக்ஸ் தொலைக்காட்சியில் அவர் கூறினார்.
எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஜலசந்தியில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை அமெரிக்காவும் ஈரானும் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் மக்ரோன் கூறினார்.

