Tuesday, May 5, 2026 4:05 pm
தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், மாதவரம் மூர்த்தி, எஸ்.ஆர்.விஜயகுமர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் இழந்திருக்கின்றனர்.
அதிமுக தரப்பில் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பின், அதிமுக அடையும் 11வது தோல்வியாகும். இதனால் அதிமுக தொண்டர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் அதிமுக போட்டியிட்ட தொகுதியில் 101 இடங்களில்கட்டுப்பணத்தை இழந்தது தெரிய வந்துள்ளது.
அதிமுக சார்பாக போட்டியிட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் டெபாசிட் தொகையை இழந்திருக்கிறார். மாதவரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மூர்த்தி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஆதி ராஜாராம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட ஜி ராஜசேகரன், மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மகேந்திரன் , கம்பம் தொகுதியில் போட்டியிட்ட ஜக்கையன் உள்ளிட்ட பலரும்கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

