Friday, May 1, 2026 8:41 pm
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் இதுவரை எந்த நடிகரும் அரசியலுக்கு வந்து இப்படி ஒரு கூட்டம் கூடியதில்லை. பிரசாரம், ரோட் ஷோ என விஜய் எங்கு சென்றாலும் அவரை பார்ப்பதற்கு இளைஞர்களும், பெண்களும், பொதுமக்களும் கூடி விடுகிறார்கள்.
இந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் நிலை வாக்காளர்களும், இளைஞர்களும் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். எனவே கண்டிப்பாக ஒரு கணிசமான வாக்குகளை விஜய் வாங்குவார் என்றே கணிக்கப்படுகிறது..
இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தாக்கம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ‘தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். தேர்தல் முடிவுகள் வரும் போது மாணவர்கள் ,முதல் நிலை வாக்காளர்களிடையே தவெகவுக்கு சாதகமான வாக்கு மாற்றம்(Swing) ஏற்பட வாய்ப்புள்ளது’ என வைகோ கூறியிருக்கிறார்.

