Friday, May 1, 2026 8:36 pm
மதிமுக மாநில இளைஞரணி துணை தலைவர் லோ. சோமசுந்தரம் ,ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட 75 நிர்வாகிகள் தங்கள் கட்சி பொறுப்புகளை இராஜினாமா செய்துள்ளனர். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட சீட் கேட்டபோது, துரை வைகோ பயன்படுத்திய சில வார்த்தைகள் தங்களை காயப்படுத்தியதே இந்த முடிவுக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கணேசமூர்த்தியின் நினைவு நாள் நிகழ்வின் போது, நிர்வாகிகள் சீட் ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது துரை வைகோ, “பதவி, பொறுப்பு என்பதெல்லாம் கட்சி போடும் பிச்சை” என்று கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சொல் தங்களின் சுயமரியாதையை பாதித்ததாக சோமசுந்தரம் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் குழப்பம் விளைவிக்க விரும்பாமல், கட்சி அறிவித்த வேட்பாளருக்காக உழைத்த பின்னரே தற்போது இந்த இராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். பொறுப்புகளை துறந்தாலும், ஆயுள் முழுவதும் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களாக தொடர்வோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

