Friday, June 19, 2026 11:12 am
அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது மற்றும் குறித்த வைத்தியசாலையை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதுமட்டுமன்றி தையிட்டி விகாரை போக்குவரத்து விடயங்கள் காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

