Tuesday, April 28, 2026 12:43 pm
வவுனியா செட்டிக்குளம் முதலியார் பகுதியில் குடும்பத்தலைவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அப் பகுதியைச் சேர்ந்த பெண் பிள்ளை ஒருவரின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை (27.04.2026) இரவு தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து, அது குறித்து செட்டிக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செட்டிக்குளம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

