Wednesday, April 22, 2026 2:12 pm
மாதம்பை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹிதியாவ பிரதேசத்தில் பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (21.04.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 43 வயதுடையவர் எனவும் அவர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிசாரால் கண்டறியப்பட்டுள்ளார்.
மாதம்பை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலே குறித்த பகுதியில் மாதம்பை பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் பயணித்த லொறி ஒன்றை சோதனை செய்த வேளை லொறியில் கொண்டு செல்லப்பட்ட 216,000 போதை மாத்திரைகளுடன், லொறியில் பயணித்த நபர் ஒருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த போதை மாத்திரைகள் கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் இருந்து விற்பனை நோக்கில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணை மூலம் முடிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

