Wednesday, April 22, 2026 10:14 am
யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை (22.04.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள;ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ள நிலையில் லொறி சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

