Monday, April 20, 2026 5:14 pm
பல மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வானிலை ஆய்வுத் திணைக்களம், நாடு முழுவதும் உள்ள பல மாகாணங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வடக்கு, வடமேற்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, கிழக்கு தெற்கு ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகல மாவட்டத்திலும் நாளை (21) வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலையை’ எட்டும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பது சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

