Wednesday, April 15, 2026 3:46 pm
கந்தளாய் குளத்தில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் இன்று காலை மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கந்தளாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
66 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் விவாகரத்தான நிலையில் 45 வருடங்களாக கந்தளாய் குளத்தின் தங்கஸ்துவ பகுதியில் மீன் வாடியில் தனிமையில் வாழ்ந்து வந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

