Saturday, April 11, 2026 3:53 pm
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 558 ஓட்டங்கள் குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவருக்கு இந்த ஆண்டு பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது நான்காவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் என 55 ஓட்டங்கள் குவித்து அசத்தியிருந்தார்.
இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அடித்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 9 ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் அவரது 9 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் ,ரி20 போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார்.

