Sunday, April 5, 2026 9:25 pm
ஈரானுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானப்படை வீரரை அமெரிக்க ராணுவம் மீட்டதற்காக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார்.
” ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு வாழ்த்துகள்! அமெரிக்காவின் அஞ்சா நெஞ்ச வீரர்களால் ஒரு துணிச்சலான அமெரிக்க விமானி மீட்கப்பட்ட இந்த நம்பமுடியாத நிகழ்வில் அனைத்து இஸ்ரேலியர்களும் மகிழ்கின்றனர்,” என்று நெதன்யாகு தனது பதிவில்கிறிப்பிட்டார். . “சுதந்திரமான சமூகங்கள் தங்கள் தைரியத்தையும் உறுதியையும் ஒன்றுதிரட்டும்போது, வெல்ல முடியாததாகத் தோன்றும் தடைகளை எதிர்கொண்டு, இருள் மற்றும் பயங்கரவாத சக்திகளை வெல்ல முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.”
இந்த மீட்பு நடவடிக்கை, “யாரையும் கைவிடக்கூடாது என்ற புனிதமான கொள்கையை வலுப்படுத்துகிறது. இது நமது இரு நாடுகளின் வரலாற்றிலும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட ஒரு பகிரப்பட்ட விழுமியம்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

