Friday, April 3, 2026 2:30 pm
தமிழகசட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுககப்பட்டிருக்கிறது.
தவெகவுடன் கூட்டணி அமைத்துவிடுவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளை காங்கிரஸ் வாங்கிக்கொண்டது. 28 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை காங்கிரஸ் தேர்ந்தெடுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ‘மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோருடனும் ஆலோசனை செய்திருக்கிறோம்.
85 சதவீத தொகுதி வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் 15 சதவீத வேட்பாளர்கள்தான் மீதம் இன்னும் சில மணி நேரங்களில் முடிவு செய்து இன்று இரவோ அல்லது நாளை காலையோ முழு பட்டியலையும் வெளியிடுவோம் என நேற்று காலை கூறினார். ஆனால், இப்போது வரை தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. வருகிற 6ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்குள் முடிவு செய்யப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.

