Thursday, March 26, 2026 3:57 pm
முல்லைத்தீவு மாவட்டத்தின் மந்துவில் பகுதியில் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி விசாரணையில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜனக குணசேகரவின் விசேட கண்காணிப்பு உத்தரவின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நுவான் வழங்கிய வழிகாட்டுதலின்படி தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
முதற்கட்டமாக திருடப்பட்ட தொலைபேசி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவு நீதவானின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் குறித்த வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
திருடப்பட்ட பணம் மற்றும் நகைகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட எஞ்சின் இ இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட மேலும் பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளில்இ இரணைப்பாலைஇ மந்துவில்இ சிவநகர்இ 9ஆம் வட்டாரம் மற்றும் 10ஆம் வட்டாரம் பகுதிகளிலும் இதே குழுவினரால் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை தெரியவந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இக்குழு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மந்துவில் பகுதியைச் சேர்ந்த பெண் உட்பட உறவினர்கள் அடங்கிய ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

