Tuesday, March 24, 2026 4:27 pm
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெரு எல்லையோரத்திலுள்ள கொலம்பியாவின் தெற்கு அமேசான் பிராந்தியமான புவேர்ட்டோ லெகுய்சாமோ பகுதியிலிருந்து 125 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற லொக்ஹீட் மார்ட்டின் ஹெர்குலஸ் சி-130 (Lockheed Martin Hercules C-130) ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 11 விமானப்படை உறுப்பினர்களும் 114 இராணுவ வீரர்களும் பயணித்ததாக கொலம்பிய விமானப்படைத் தளபதி குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் இறுதி எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

