Sunday, March 22, 2026 4:30 pm
கொழும்பு மாநகர சபை, நகருக்குள் வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை நாளை (23) முதல் மீண்டும் அமுல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதி நிலைக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வாகன நிறுத்துமிட மேலாண்மை மற்றும் கட்டண வசூல் காலை 6.00 மணி முதல் மீண்டும் தொடங்கும் என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.
எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் , நீண்ட வரிசைகள் காரணமாக, 18ஆம் திகதி முதல் வாகன நிறுத்துமிடக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், கியூஆர் குறியீட்டு முறை , வாகன எண் அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நெரிசல் குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

