Friday, March 20, 2026 4:21 pm
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் லங்கா சதொசவில் அரிசியைக் கொள்வனவு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார்.
அதன்படி, வெள்ளை நாடு – ரூ. 217
வெள்ளைப்பச்சை அரிசி – ரூ. 203
கோதுமை மா – ரூ. 254
நெத்தலி – ரூ. 1,050
பருப்பு – ரூ. 264
பெரிய வெங்காயம் – ரூ. 150 – 160 இற்கு இடைப்பட்ட விலை என, ஒவ்வொரு பொருளுக்கும் கொள்வனவு வரம்பு (Limit) விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தச் சலுகை நுகர்வோருக்கானதே அன்றி வியாபாரிகளுக்கானது அல்ல என்றும் தெரிவித்தார்.
சதொசவில் 2,500 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களுக்குப் பரிசில்களை வழங்கும் திட்டமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

