Friday, March 20, 2026 3:32 pm
யாழ்ப்பாணம் – நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்குதுறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலைமை காணப்படுவதனால், பல பகுதிகளிலும் இன்றையதினம் காலை மழை பெய்திருந்தது. இந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்று வீசியதனால் தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டது.
அதேவேளை நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்குதுறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற்கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

