Thursday, March 19, 2026 4:21 pm
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விசாரணைகளுக்கமைய கைதான அவர் இன்றைய தினம் கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

