Wednesday, March 18, 2026 2:13 pm
மாரடைப்பு காரணமாக இளம் குடும்பஸ்தரும் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் வடமராட்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் வட இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியரின் கணவரும் சட்டத்தரணியுமான 40 வயதுடைய சிவராசா நிகாஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 7 மணியளவில் உடல்நலக் குறைவினால் நெல்லியடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த மரணம் அப்பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

