Tuesday, March 17, 2026 2:50 pm
நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பின்படி, தற்போதைய கையிருப்பு பின்வரும் திகதிகள் வரை போதுமானதாக இருக்கும்,
92 ரக பெட்ரோல் ஏப்ரல் 23ஆம் திகதி வரை
95 ரக பெட்ரோல் மே 10ஆம் திகதி வரை
டீசல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை
சூப்பர் டீசல் மே 10ஆம் திகதி வரை
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக புதிய எரிபொருள் கப்பல்கள் வருகை தருவதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
எவ்வாறாயினும் மேலதிக எரிபொருள் தொகைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

