Tuesday, March 17, 2026 10:12 am
யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரட்லீ மற்றும் அவரது சகோதரியான 19 வயதுடைய டிலக்ஸி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

