Monday, March 16, 2026 3:56 pm
98ஆவது ஒஸ்கார் விருது விழா பட்டியலில் பல்வேறு அதிரடி மாற்றங்களும் புதிய சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.
சிறந்த நேரடித் திரைப்படத்திற்கான (Best Live Action Feature Film) விருது இம்முறை The Singers மற்றும் Two People Exchanging Saliva ஆகிய இரண்டு படங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
‘Weapons’ திரைப்படத்தில் நடித்தமைக்காக ஏமி மேடிகன் (Amy Madigan) சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். ‘One Battle After Another’ திரைப்படத்தில் நடித்த சீன் பென் (Sean Penn) சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கர் விருதைத் தட்டிச் சென்றார். இது அவரது மூன்றாவது ஒஸ்கார் விருதாகும்.
ஒஸ்கார் வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ‘சிறந்த நடிகர்கள் தெரிவு’ (Best Casting) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் One Battle After Another திரைப்படத்திற்காக கசாண்ட்ரா குலுகண்டிஸ் (Cassandra Kulukundis) முதல் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
ரியான் கூக்லர் இயக்கத்தில் வெளியான திரைப்படமான ‘Sinners’, ஒரே ஆண்டில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. இப்படம் ‘சிறந்த அசல் திரைக்கதைக்கான’ (Best Original Screenplay) விருதை வென்றுள்ளது.
”One Battle After Another’ திரைபடத்திற்காக பவுல் தோமஸ் அண்டர்சன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.
‘Hamnet’ திரைப்படத்துக்காக ஜெஸ்ஸி பக்லி சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.

