Wednesday, March 11, 2026 4:33 pm
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.
இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது.
இந்த இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

