Wednesday, March 11, 2026 11:44 am
ஈரானுடனான போரில் இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 140 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் 108 வீரர்கள் மீண்டும் தங்களது பணிகளுக்குத் திரும்பியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் (Sean Parnell) தெரிவித்துள்ளார்.

