Wednesday, March 4, 2026 10:37 am
பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வத்திக்கானின் அரசுகளுடனான உறவுகளுக்கான பிரதிச் செயலாளர் மிஹைட்டா பிளாஜிடம் (Msgr. Mihăiță Blaj) இந்த உத்தியோகபூர்வ அழைப்பிதழைக் கையளித்துள்ளார்.

