Monday, March 2, 2026 3:17 pm
2026ம் ஆண்டில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடிச் சிகிச்சை பெறுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

