Thursday, February 26, 2026 3:08 pm
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இன்று வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது.
நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற்றது. இவர்களின் திருமணம் காலை 10.10 மணிக்கு பாரம்பரிய சடங்குகளின் படி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் கடந்த தினங்களில் நடைபெற்றது.

