Saturday, February 14, 2026 7:55 am
உலக நாடுகளிடையே நடக்கும் ஊழல் தொடர்பான பட்டியலை ட்ரான்ஸ்பரன்சி இன்டரநஷனல் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
ட்ரான்ஸ்பரன்சி இன்டரநஷனல் வெளியிட்டுள்ள 2025 ஊழல் புலனாய்வு குறியீட்டின்படி, 180 நாடுகளில் இலங்கை 107வது இடத்தில் உள்ளது. 2002 முதல் 2025 வரை இலங்கையில் ஊழல் தரவரிசை சராசரியாக 89.71 ஆக இருந்தது, இது 2024 இல் 121.00 என்ற அதிகபட்ச அளவையும் 2002 இல் 52.00 என்ற குறைந்தபட்ச அளவையும் எட்டியது. 2024 இல் 121 வது இடத்திலிருந்த இலங்கை 2025 இல் 107 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இலங்கையில் ஊழல் என்பது ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது, இது பெரும்பாலான இலங்கையர்களின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துள்ளது. அதிக வருமான சமத்துவமின்மை/வேறுபாடு மற்றும் அதிகரித்த வறுமை ஆகியவை இலங்கையில் நிலவும் ஊழல் கலாச்சாரத்திற்கு பங்களித்துள்ள தாக ட்ரான்ஸ்பரன்சி இன்டரநஷனல் தெரிவித்துள்ளது.
இந்தியா 39 புள்ளிகள் மட்டுமே பெற்றுள் , சர்வதேச அளவில் அதிக ஊழல் நடக்கும் நாடுகள் லிஸ்டில் 91வது இடத்தையும் பிடித்துள்ளது.
ஊழல் பற்றிய புரிதல், நிபுணர்கள் கருத்து, பொதுத் துறையில் உணரப்படும் ஊழல் ஆகியவற்றைக் கொண்டு இந்த லிஸ்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 புள்ளி என்பது ஊழலில்லாத நிர்வாகத்தைக் குறிக்கிறது. அது மெல்லக் குறைந்து 0 புள்ளி என்றால் அதிக ஊழல் என்று அர்த்தம். இந்த லிஸ்டிலும் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே ஊழலற்ற நாடுகளாக உள்ளன. ஊழலற்ற நாடுகள் இந்த லிஸ்டில் 89 புள்ளிகளுடன் டென்மார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
டென்மார்க் (89), பின்லாந்து (88) , சிங்கப்பூர் (84) நியூசிலாந்து , நோர்வே ஆகிய நாடுகள் 81 மா புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளன. சுவீடன், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஜேர்மனி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் டாப் 10ல் இடம் பெற்றுள்ளன. அமெரிக்கா 29வது இடத்திலும், , இங்கிலாந்து 20வது இடத்திலும் உள்ளன.சீனா [43] 76வது இடம்,பாகிஸ்தான் [28] 136வது இடம்.பூட்டான் [71] 18வது இடம், பங்களாதேஷ் [24[ 150வது இடம்.
தெற்கு சூடான் , சோமாலியா ஆகிய இரண்டும் ஒன்பது புள்ளிகளுடன் பெற்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளன. அவற்றுக்கு முன்னால் ஏமன், லிபியா, எர்தியா, சூடான ஆகிய நாடுகள் இருக்கின்றன.

