Thursday, February 12, 2026 2:57 pm
கண்டி, பல்லேகலவில் இன்று நடைபெற்ற 2026 ஐசிசி T20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களினால் ஓமானை வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தசூன் ஷானக்க, பவன் ரத்நாயக்க, குசல் மெண்டீஸ் ஆகியோரின் அரை சதங்களுடன் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மஹீஷ் தீக்ஷன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் முறையே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பவன் ரத்நாயக்க தெரிவானார்.

