Thursday, February 12, 2026 11:43 am
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனுக்கு 17 வயது என்பது உறுதியாகியுள்ளது.
பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தி சென்றதாக நேற்று முன்தினம் (10) அதிகாலை பொலிஸார் குறித்த வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த அருள்பயஸ் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இது தொடர்பில் 10ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட ஊடக அறிவித்தலில் 17 வயது என குறிப்பிட்டிருந்த நிலையில், நேற்று 11ம் திகதி வெளியிட்ட மற்றுமொரு ஊடக அறிவித்தலில் 19 வயது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த சிறுவன் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09ஆம் திகதி பிறந்தார் என வீட்டார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கு பின்னரே உயிரிழந்தவருக்கு 18 வயதாகும் எனவும், தற்போது சிறுவனுக்கு 17 வயதும் 3 மாதங்களுமே ஆகின்றன என உறுதியாகியுள்ளது.

