Wednesday, February 11, 2026 11:50 am
2026 T20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஐக்கிய அமெரிக்கா அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. முதலில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது.
191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

