Tuesday, November 17, 2026 5:43 pm
உலக வானிலை அமைப்பு மற்றும் ஐநாவின் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார , சமூக ஆணையம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் 13 நாடுகள் இணைந்து புயல்களுக்கு பெயரிடுவதற்கான பட்டியலை உருவாக்கியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் மொத்தம் 169 பெயர்கள் இடம்பெற்றுள்ளன. வரிசைப்படியே பெயர்கள் வங்கக்கடல் ,அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் புயல் உருவாகும்போது, டெல்லியில் உள்ள பிராந்திய சிறப்பு வானிலை ஆய்வு மையம் இந்தப் பட்டியலில் இருந்து வரிசைப்படி பெயர்களை தேர்வு செய்கிறது. அதன்படியே சமீபத்தில் உருவான புயல்களுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘அர்னாப்’, இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டன. ஈரான் பரிந்துரைத்த அக்வான் என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
அக்வான் என்ற பெயர் பாரசீக நாட்டின் புராணக் கதைகளுடன் தொடர்புடையது. பாரசீகத்தின் புகழ்பெற்ற காவியமான ‘ஷாநாமே’ நூலில் இடம்பெறும் அக்வான் திவ் என்ற புராணக் கதாபாத்திரத்தை மையமாக கொண்டே இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிஞர் ஃபெர்தவுசி எழுதிய இந்த காவியத்தில், அக்வான் வலிமையும் தந்திரமும் கொண்ட எதிரியாக சித்தரிக்கப்படுகிறார். புயல் உருவாகும்போது அதை எதிர்கொள்வது, மக்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது, பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ளவே புயல்களுக்கு இதுபோல தனித்துவமான பெயர்கள் வழங்கப்படுகிறது.

