Wednesday, February 11, 2026 10:05 am
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது.
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரதான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாகக் கருதப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து அந்த மக்களை விடுவித்து சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஒரு விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் ஊடாக இந்த இலக்கை அடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் அதிக பங்களிப்பை வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

