Tuesday, February 10, 2026 1:49 pm
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை துப்பாக்கியுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த நபர் பை ஒன்றினுள் T56 ரக துப்பாக்கியை வைத்துக்கொண்டு மருதனார்மடம் சந்தைக்கு இன்று காலை வந்துள்ளார். அவரது இடுப்புக்குள் கைத்துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கியுடன் வருகை தந்த நபர் தனிநபரொருவருடைய பெயரை விசாரித்ததுடன், வட்டிக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என விசாரித்து சென்றதாகக் கூறப்படுகிறது.
கையில் கொண்டு வந்த பணிஸை சாப்பிட்டுக்கொண்டு பின்னர் அங்கு பச்சை மிளகாயை வாங்கிக்கொண்டு சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது. அவர் கைகளுக்கு கறுப்புநிற கையுறைகளையும், தலையில் தலைக் கவசத்தையும் அணிந்தவாறு வந்துள்ளார்.
குறித்த நபர் அங்கிருந்து சென்றதும் சந்தையில் இருந்தவர்கள் சுன்னாகம் பொலிஸாருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

