Saturday, February 7, 2026 9:54 am
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவையும், அவரது மனைவியையும் குரங்குகள் போலச் சித்தரித்து டிரம்ப் வெளியிட்ட இனவெறி வீடியோ மிகப் பெரிய சர்ச்சையானது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பவே, அந்த வீடியோவை வெள்ளை மாளிகை நீக்கி விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போதும் சர்ச்சை கருத்துகளைத் தான் கூறுவார். அவரது சமூக வலைத்தள போஸ்ட்களும் கூட பல முறை சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. அப்படித் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ சர்ச்சையானது.
இந்தச் சம்பவம் பெரிதாக வெடித்த நிலையில், இந்த வீடியோ தவறுதலாகப் பகிரப்பட்டதாகவும் இதை இப்போது நீக்கிவிட்டதாகவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. “ஊழியர் ஒருவர் தவறுதலாக இந்த வீடியோவை பதிவிட்டுவிட்டார். அது உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது,” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் எப்போதும் சர்ச்சை கருத்துகளைத் தான் கூறுவார். அவரது சமூக வலைத்தள போஸ்ட்களும் கூட பல முறை சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது

