Thursday, February 5, 2026 9:02 pm
பாரசீக வளைகுடாவில் வியாழக்கிழமை இரண்டு வெளிநாட்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியதாக அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தக் கப்பல்கள் எரிபொருளைக் கடத்தியதாகவும், டேங்கர்களின் தேசியம் ,அவை எந்தக் கொடியின் கீழ் பறக்கின்றன என்பது பற்றி எதுவும் குறிப்பிடபப்டவில்லை.
புரட்சிகர காவல்படையின் கடற்படையின் பிராந்திய தளபதியான ஜெனரல் ஹெய்டர் ஹொனாரியன் மொஜாரட், டேங்கர்கள் டீசல் உட்பட சுமார் 1 மில்லியன் லிற்றர் எரிபொருளை (சுமார் 6,300 பீப்பாய்கள்) எடுத்துச் சென்றதாகவும், ஃபார்சி தீவுக்கு அருகே கைப்பற்றப்பட்டு புஷேருக்கு மாற்றப்பட்டதாகவும் கூறினார்.
இரண்டு டேங்கர்களிலும் உள்ள பதினைந்து பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்,

