Thursday, February 5, 2026 4:12 pm
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை, மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தது.
கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட சட்டத்தரணிக்கு எதிராக கடந்த ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி பெறப்பட்ட தடுத்து வைப்பு உத்தரவு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மீண்டும் 90 நாட்கள் தடுத்து வைப்பு உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

