Wednesday, February 4, 2026 7:29 pm
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் வித் லவ். இந்த படம் பெப்ரவரி 6ம் திகதி தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றது .இந்த படத்திற்கான premier ஷோ நேற்று திரையிடப்பட்டது. இந்த பிரிமியர் ஷோவுக்கு பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த படத்தை ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். படம் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதைப்பற்றி வலை பேச்சில் இன்று அவர்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அதாவது 96, ஆட்டோகிராப் போன்ற திரைப்படங்கள் காதல் திரைப்படங்களை சார்ந்து ஒரு பெஞ்ச் மார்க்கை தமிழ் சினிமாவில் கிரியேட் செய்திருக்கின்றன. இப்போது அந்த லிஸ்டில் வித் லவ் திரைப்படமும் இணைந்துள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக பள்ளி பருவ காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தின் கதைப்படி ஹீரோவுக்கு பெண்பார்க்கும் படலம் நடக்கிறது. அங்கு போன இடத்தில் அந்த பெண்ணை பார்த்து ஹீரோ பேசுவார். இருவரும் தனியாக அவரவர் அனுபவங்களை பற்றி பேச ஆரம்பிக்கும் பொழுது பள்ளி பருவ கதைகளை எல்லாம் பற்றி பகிர்ந்து கொள்வார்கள். கடைசியில் ஒரே பள்ளியில் தான் இருவரும் படித்திருப்பார்கள். அப்படியே அந்தக் கதைகளை சொல்ல ஹீரோவுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் இருக்கிறது. ஹீரோயினுக்கும் ஒரு பிளாஷ் பேக் இருக்கிறது. எல்லாம் சுற்றி ஒரே புள்ளியில் தான் முடியும். அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் இயக்குனர் மதன் இவர் ஒரு புதுமுக இயக்குனர். ஆனால் படத்தை பார்க்கும் பொழுது இவர் புது முக இயக்குனர் என்று சொல்ல முடியாது .நேர்த்தியான திரை கதையில் அந்த படத்தை அவ்வளவு அழகாக செய்துள்ளார். பள்ளிக்கூட காலத்தில் நடந்ததை மிகவும் யதார்த்தமாக இந்த கதையில் காட்டியுள்ளார். படத்தின் கதாநாயகன் அனஸ்வர ராஜன். இதுவரை இப்படி ஒரு கதாநாயகியை பார்த்ததே இல்லை .அவ்வளவு அழகாக இருக்கிறார். மிகவும் யதார்த்தமான நடிப்பை அழகாக கொடுத்திருக்கிறார். அதுவும் இரண்டு மாதிரியான நடிப்பு சமகாலத்தில் ஒன்று பள்ளி பருவத்தில் ஒன்று என வேறுபடுத்தி அழகாக நடித்திருக்கிறார்.

