Wednesday, February 4, 2026 12:10 pm
இலங்கையின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
இலங்கை அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை கூறும் முகமாக கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டிக்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமும் இணைந்து வடக்கு, கிழக்கில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் காலை 10.00 மணி முதல் இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

