Tuesday, February 3, 2026 8:18 pm
இசைஞானி இளையராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பகிர்ந்து இசை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தகவலைப் பகிர்ந்துள்ளார். இசைஞானி கடந்த ஆண்டு லண்டனுக்குச் சென்று தனது சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இது இந்திய திரை இசையில் எந்த ஒரு இசைக் கலைஞரும் அல்லது இசையமைப்பாளரும் செய்திடாத ஒன்று
“ பெப்ரவரி 3ஆம் திகதியுடன் நான் எனது புதிய ஸ்டூடியோவுக்கு வந்து 5 ஆண்டுகளை நிறைவு பெறுகிறது. மேலும் நான் எனது இரண்டாவது சிம்பொனியை பெரும்பாலும் முடித்துவிட்டேன்” என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

