Tuesday, February 3, 2026 4:00 pm
T20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப சுற்றுப் போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக லசித் மலிங்க பணியாற்ற உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லசித் மலிங்க எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இலங்கை அணியில் இணைய உள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026க்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தசுன் ஷானக்க தலைமையில், தசுன் ஷானக , பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, ஜனித் லியனகே, சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, எஷான் மலிங்க, துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஸன மற்றும் மதீஷ பத்திரன ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த அணி உள்ளது.
இலங்கை அணி பெப்ரவரி 8 ஆம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக உலகக் கோப்பைப் பயணத்தைத் தொடங்கவுள்ளது.

