Tuesday, February 3, 2026 6:58 am
இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.இந்தியா-அமெரிக்கா உறவின் பலம் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேசினர். இந்த உரையாடலில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் இன்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று காலை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடியது எனக்கு ஒரு பெருமை. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், மேலும் தனது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மதிக்கப்படும் தலைவர். வர்த்தகம் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் வாங்க ஒப்புக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

