Monday, February 2, 2026 3:56 pm
வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவருக்கான வாக்களிப்பு இன்று (02) நடைபெற்றது. புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) சிந்தக ஹேவாபதிரண தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதன்படி, வெலிகம பிரதேச சபையின் கட்டுப்பாட்டை தேசிய மக்கள் சக்தி ஒரு வாக்கு பெரும்பான்மையால் பெற்றது.
கடந்த வருடன் அக்டோபர் 22 ஆம் திகதி தனது அதிகாரப்பூர்வ அலுவலகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலையைத் தொடர்ந்து வெலிகம பிரதேச சபையின் தலைவர் பதவி காலியாக இருந்தது.

