Monday, February 2, 2026 11:35 am
வவுனியா – நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் பெருமளவு பொதுமக்கள் கலந்து அரசின் இந்த திட்டத்திற்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, சிறீரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வவுனியா – முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு தண்ணீரை இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் – மகாவலி எல் வலயத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும்.

